5ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு.. கலெக்டர் ஆபீசில் வேலை காத்திருக்கு..!
5ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு.. கலெக்டர் ஆபீசில் வேலை காத்திருக்கு..!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 23 கிராம உதவியாளர் பணியிடங்கள் இன சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 என்றும் அதிகபட்சம் 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 32 வயதிற்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.11,000 முதல் ரூ.35,100 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர், www.mayiladuthurai.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து Taluk Office, Sirkali, Mayiladuthurai-609111 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். வரும் 28-ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

