Theme Check

இந்த தேதிகளில் ரேஷன் கடை இயங்காது..!!

இந்த தேதிகளில் ரேஷன் கடை இயங்காது..!!

இந்த தேதிகளில் ரேஷன் கடை இயங்காது..!!
X

வருகிற ஜூன் 7 முதல் 9-ந் தேதி வரை அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகையில் நடைபெற்றது.இதில் பங்கேற்ற பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு. பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தோடு இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஜூன் 7, 8, 9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடு உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

அதனைத் தொடர்ந்து, ஜூன் 10-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள பணியாளர்களைத் திரட்டி, சென்னையில் முதல்வரை சந்திப்பதற்கான காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

Next Story
Share it