சிக்கும் ரிசர்வ் வங்கி அலுவலர்கள்.. கைதுக்கு தயாராகி வரும் சென்னை காவல்துறை !!
சிக்கும் ரிசர்வ் வங்கி அலுவலர்கள்.. கைதுக்கு தயாராகி வரும் சென்னை காவல்துறை !!

குடியரசு தின விழாவின்போது தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது, தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு நிற்கவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பியவர்களுடன் அலுவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாலும் தமிழர்கள் என்பதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

அப்போது, தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க தேவையில்லை என நீதிமன்ற ஆணை இருப்பதாக ரிசர்வ் வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசாணையின்படி எழுந்து நிற்க வேண்டும் என சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரிசர்வ் வங்கி அலுவலர்களின் இந்த செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதலங்களில் வைரலானது.
பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரிசர்வ் வங்கி அலுவலர்களின் செயலுக்கு எதிராக இன்று பல்வேறு அமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் தமிழக அரசாணையை அவமதித்த ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறையிடம் ஆன்லைன் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னை காவல்துறையினர் வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in

