படித்தது பத்தாம் வகுப்பு, பார்த்தது டாக்டர் வேலை - கம்பி எண்ணும் பெண்!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் தொண்டியில் நிலா கிளினிக்கை நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு தொண்டியில் உள்ள கிளினிக்கில் அளித்த தவறான சிகிச்சையில் 60 வயதான மூதாட்டி உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள் கிளினிக்கை முற்றுகையிட்டதால், ராஜலட்சுமி தலைமறைவானார்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் டிக் டாக் நண்பருடன் சேர்ந்து போலியாக மருத்துவம் பார்த்து வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் தொண்டியில் நிலா கிளினிக்கை நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு தொண்டியில் உள்ள கிளினிக்கில் அளித்த தவறான சிகிச்சையில் 60 வயதான மூதாட்டி உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள் கிளினிக்கை முற்றுகையிட்டதால், ராஜலட்சுமி தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையில் ராஜலெட்சுமி 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்நிலையில் கிளினிக்கில் உள்ள பொருட்களை எடுக்க வந்த ராஜலட்சுமியை பிடித்து பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ராஜலட்சுமியிடம் நடத்திய விசாரணையில் அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பதும், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

ராஜலட்சுமிக்கு டிக் டாக் மூலம் காரைக்குடி அருகே கோட்டையூரை சேர்ந்த சுரேந்தர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இணைந்து மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். அவருக்கு உதவியாக செல்வம், பீட்டர், கலந்தர் ஆஷிக் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
newstm.in

