உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்! ரஷ்யா திடீர் அறிவிப்பு!!
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்! ரஷ்யா திடீர் அறிவிப்பு!!

உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா திடீர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சுமார் 22 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அங்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பெரிய நகரங்களில் வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச் சூடு சத்தமும் அலற சுமார் 1 லட்சம் பேர் வீடு வாசலை விட்டு வெளியேறி விட்டனர். 12 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. செர்னோபில் அணு நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றிவிட்டன.

இந்நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால், இரு பக்கமும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனங்கள் தெரிவித்து பொருளாதாட தடை விதித்து வருகிறது.

இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமாறு உக்ரைன் ராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புடின், வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இருவரது சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in

