Theme Check

எந்த வகை கொரோனாவையும் எதிர்கொள்ள தயார்.. பேரவையில் அமைச்சர் தகவல்..!

எந்த வகை கொரோனாவையும் எதிர்கொள்ள தயார்.. பேரவையில் அமைச்சர் தகவல்..!

எந்த வகை கொரோனாவையும் எதிர்கொள்ள தயார்.. பேரவையில் அமைச்சர் தகவல்..!
X

தமிழக சட்டப்பேரவையில் இன்று (12-ம் தேதி) கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது, புதிய வகை கொரோனாவை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: “தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்கும் போது தினசரி பாதிப்பு உச்சத்தில் இருந்தது.

அதன்பின்னர், இரண்டாம் அலையும் மூன்றாம் அலையும் எதிர்கொண்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த ஒரு மாதமாக 50-க்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகி வருகின்றன. கொரோனாவால் உயிரிழப்பு இல்லாமல் உள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சர்வதேச விமானங்களில் வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு விமானத்திலும் 2 சதவீத பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வாரத்தில், ரூ.360 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 2,096 அதிதீவிர சிகிச்சை படுக்கைகளை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார். ஆகையால், தமிழகத்தில் எந்த வகை கொரோனா வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

தடுப்பூசியை பொறுத்தவரை, தமிழக அரசு ஒரு இயக்கமாக செயல்பட்டு முதல் தவணை 92.37 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 77.19 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும், புதிய வகை கொரோனா குறித்து உரிய எச்சரிக்கையுடனும், கவனமுடனும் செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it