தலீபான்களுடன் போரிட தயார்.. பள்ளத்தாக்கு பாஞ்ஷிர் போராளிகள் அறிவிப்பால் பதற்றம் !!
தலீபான்களுடன் போரிட தயார்.. பள்ளத்தாக்கு பாஞ்ஷிர் போராளிகள் அறிவிப்பால் பதற்றம் !!

ஆப்கானிஸ்தானில் பாஞ்ஷிர் போராளிகள் பள்ளத்தாக்கில் உள்ள போராளி குழுக்களுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதும் அதிபராக இருந்த அஷரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததால் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். தலிபான்கள் வீதி வீதியாக, வீடு வீடாக சென்று தங்கள் எதிர்ப்பாளர்கள் குறித்து சோதனை நடத்துகின்றனர்.

இதனிடையே, தலிபான்களுக்கு எதிராக தற்போது ஆப்கானிஸ்தானில் ஒரு ஆயுதம் ஏந்திய அமைப்பு உருவாகியுள்ளது. ஆப்கனின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பாஞ்ஷிர் பள்ளத்தாக்கு போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. பாஞ்ஷிர் போராளிகள் ஏற்கனவே தலிபான்களுக்கு எதிராக சண்டையிட்டுள்ளனர்.
1990ஆம் ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்திய தலீபான்களால் கூட பாஞ்ஷிரை நெருங்க முடியவில்லை. இந்த நிலையில் தற்பொழுது காபூலை கைப்பற்றியுள்ள தலீபான்கள் தங்களுக்கு சவாலாக திகழும் பாஞ்ஷிர் பள்ளத்தாக்கை தலைவணங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், பாஞ்ஷிர் பள்ளத்தாக்கு அகமது மசூத் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் துணை அதிபர் அமருல்லா சாலே ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் தலிபான்களுக்கு எதிரான போருக்கு தயார் படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் பாஞ்ஷிர் பள்ளத்தாக்கில் உருவாகும் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நிலை தலீபான்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களும் தலிபான்களுக்கு சவால் விடுத்துள்ளனர். அதாவது தொடர்ந்து தலிபான்கள் அடக்குமுறையை கையிலெடுத்தால் ரத்தம் சிந்த தயார் என அப்துல் மசூத் எச்சரித்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தானில் பதற்றம் உருவாகியுள்ளது.
newstm.in

