அசத்தலான அம்சங்களுடன் விற்பனைக்கு வந்தது ‘ரியல்மி 9’..!
அசத்தலான அம்சங்களுடன் விற்பனைக்கு வந்தது ‘ரியல்மி 9’..!

ரியல்மி நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரியல்மி 9' ஸ்மார்ட்போனின் விற்பனையை இந்தியாவில் துவக்கியுள்ளது.
ரியல்மி 9 வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் சில சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரியல்மி 9 புரோ ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ரியல்மி 9’ ஸ்மார்ட்போனின் விற்பனையை அந்நிறுவனம் நேற்று (12- தேதி) இந்தியாவில் துவக்கியுள்ளது.
ரியல்மீ 9 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
* 6.4 இன்ச் அளவுகொண்ட எச்டி திரை
* சூப்பர் அமோல்ட்(AMOLED) திரை
* ஸ்னாப்டிராகன் 680 சிசி
* உள்ளக நினைவகம்-ரேம்(RAM) 6 மற்றும் 8 ஜிபி , கூடுதல் நினைவகம் (STORAGE) 128 ஜிபி
* பின்பக்கம் 108 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், 8 எம்பி விரிவான கோணத்திற்கும், 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க செல்ஃபி கேமரா 16 எம்பி அளவை கொண்டுள்ளது.
* 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி
* ஆன்டிராய்டு 12 ஒஎஸ்
* டைப்-சி போர்ட்
விற்பனை விவரம்:
6ஜிபி ரேம் + 128 ஜிபி ரூ.17,999 ஆகவும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்மார்ட்போன் ரூ.18,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

