Theme Check

அரசுக்கு எதிராக கலகம்.. பாஜக பெண் நிர்வாகி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு..!

அரசுக்கு எதிராக கலகம்.. பாஜக பெண் நிர்வாகி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு..!

அரசுக்கு எதிராக கலகம்.. பாஜக பெண் நிர்வாகி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு..!
X

காவல் துறையின் எச்சரிக்கையை மீறி, சமூக வலைதளத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக பாஜக பெண் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘மதத்தின் பெயரில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளை பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்றவற்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள சர்ச்சை இடிக்காமல், இந்து கோவில்கள் இடிக்கப்படுவதாகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளை அநாகரிகமாக பேசியும் மர்ம நபர் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவை, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சவுதா மணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “தைரியமா? விடியலுக்கா?” எனக் குறிப்பிட்டிருந்தார்.
பாஜக இளைஞரணி நிர்வாகியைத் தொடர்ந்து பெண் நிர்வாகி மீது சைபர் கிரைம் 2  பிரிவுகளில் வழக்குப்பதிவு | www.patrikai.com
இதைச் சுட்டிக்காட்டி, மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் வதந்தி பரப்பும் சவுதா மணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், சவுதா மணி கருத்து பதிவிட்டதை உறுதி செய்ததை அடுத்து, அவர் மீது அரசுக்கு எதிராக கலகம் செய்ய தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் கடந்த 28-ம் தேதி, பாஜக நிர்வாகி வினோஜ் பி.செல்வம் மீது மதக்கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it