தமிழகம் முழுவதும் 20,463 குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை!!
தமிழகம் முழுவதும் 20,463 குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை!!

தமிழகம் முழுவதும் சேதமடைந்த 20,453 குடியிருப்புகளை இடிக்க தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விபத்தை யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
முன்னதாகவே மக்கள் கட்டடத்தை விட்டு வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள குடியிருப்புகள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள 22,271 குடியிருப்புகளில் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில், 20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
அவற்றை உடனடியாக இடித்து, மறு கட்டுமானம் மேற்கொள்ள வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர் குழு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

