Theme Check

80 பதக்கம், 40 கோப்பை, 135 சான்றிதழ்கள் பெற்ற சாதனை இளைஞர்.. கட்டிட வேலை செய்யும் பரிதாப நிலை !!

80 பதக்கம், 40 கோப்பை, 135 சான்றிதழ்கள் பெற்ற சாதனை இளைஞர்.. கட்டிட வேலை செய்யும் பரிதாப நிலை !!

80 பதக்கம், 40 கோப்பை, 135 சான்றிதழ்கள் பெற்ற சாதனை இளைஞர்.. கட்டிட வேலை செய்யும் பரிதாப நிலை !!
X

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பாளையம் தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் ரமாவத் சின்னி கிருஷ்ணய்யா (28). பழங்குடி இளைஞரான இவர் எம்.எட் படித்து வருகிறார். இயற்கையிலேயே மலை வளங்களை இவரது ஊர் கொண்டுள்ளதால், இவர் சிறு வயது முதலே ஊரில் இருக்கும் மலைகளை ஏறி பயிற்சி மேற்கொண்டார்.

பின்னர், 2017 ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் உள்ள 17,000 அடி உயரமுள்ள ரீராக் எனும் மலையை ஏறி சாதனை படைத்தார். பின்னர் 2018ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் உள்ள துலியன் பீக் (15 ஆயிரம் அடி), அதே ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ (58 ஆயிரம் மீட்டர்), 2019ல் ரஷ்யாவில் உள்ள எல் புர்ஸி (40 ஆயிரம் மீட்டர்) போன்ற மலைகளை சில அமைப்பினரின் நிதி உதவியால் ஏறி சாதனை படைத்துள்ளார். இவர் ஹை ரேஞ்ச் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

ramavath

அதோடு மட்டுமல்லாமல் தற்காப்பு கலையிலும் சிறந்து விளங்குகிறார். கராத்தேவில் கருப்பு பெல்ட், உயரம் தாண்டுதல், ஓட்டப் பந்தயங்களிலும் பல கோப்பைகளை வென்றுள்ளார். இதுவரை இவர் தங்கம், வெள்ளி உட்பட 80 பதக்கங்கள், 40 கோப்பைகள் மற்றும் 135 சான்றிதழ்களை பெற்றுள்ளார்.
குறிப்பாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆந்திர ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந் தன் ஆகியோரிடம் இருந்து இவர் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

ramavath

இத்தனை சாதனைகளையும் பெருமைகளையும் கொண்ட கிருஷ்ணய்யா கூலி வேலை செய்து பெற்றோரை கவனித்து வருகிறார். அதாவது சரியான வேலை கிடைக்காமல் கட்டிட தொழில் செய்தும், மாங்காய் சீசனில் தெரு ஓரத்தில் தள்ளு வண்டியில் மாங்காய்களை விற்றும் பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், திருப்பதியில் துணை முதல்வர் நாராயணசாமியை சந்தித்து, தனது வாழ்க்கைக்கு உதவும் படி கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு அரசு உதவ வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it