Theme Check

பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 ஆபாச நடன அழகிகள் மீட்பு.. பரபரப்பு வீடியோ

பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 ஆபாச நடன அழகிகள் மீட்பு.. பரபரப்பு வீடியோ

பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 ஆபாச நடன அழகிகள் மீட்பு.. பரபரப்பு வீடியோ
X

பாரில் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 நடன அழகிகளை போலீசார் மீட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் மதுபான விடுதிகளில் 'டான்ஸ் பார்களுக்கு' தடை விதிக்கப்பட்டது. அதாவது, டான்ஸ் பார்களில் பெண்கள் ஆபாச உடைகள் அணிந்து நடனமாடியதாக புகார் எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில இடங்களில் உடலில் ஒட்டு துணி இல்லாமலும் பெண்கள் கவர்ச்சி நடனம் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மாநில அரசு 'டான்ஸ் பார்களுக்கு' தடை விதித்தப்போதும் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக டான்ஸ் பார்கள் நடந்து வருகின்றன.

dance bar

இதில் அந்தேரி பகுதியில் உள்ள தீபா என்ற பாரில் சட்டவிரோத செயல்கள் நடந்து வருவதாக சமூக குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து அண்மையில் இரவு 11 மணியளவில் அந்த பாரில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது பாரில் பெண்கள் யாரும் இல்லை. நடன அழகிகள் குறித்து போலீசார் அங்குள்ள ஊழியர்களிடம் பல மணி நேரம் விசாரித்தனர். அவர்களும் பாரில் நடன அழகிகள் கிடையாது என விடாப்பிடியாக கூறினர். இதனையடுத்து போலீசார் அங்கிருந்து சென்றபோதும், சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது மீண்டும் சோதனை மேற்கொண்டனர்.

dance bar

அப்போது பாரில் ஒரு அறையில் சந்தேகத்துக்கு இடமாக பெரிய அளவில் கண்ணாடி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த கண்ணாடியை உடைத்து பார்த்தபோது, அதற்கு பின்புறம் சிறியளவில் கதவு இருந்தது. மேலும் அந்த கதவை திறந்த போது உள்ளே குறுகிய பாதாள அறையில் அறைகுறை ஆடைகளுடன் நடன அழகிகள் அடைக்கப்பட்டு இருந்தனர்.

அந்த அறைக்குள்ளேயே அழகிகளுக்கு தேவையான குடிநீர், குளிர்பானம், உணவு வகைகளும் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாதாள அறையில் இருந்த 17 நடன அழகிகளையும் மீட்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பார் மேலாளர், காசாளர், 3 ஊழியர்களை கைது செய்து பாருக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it