Theme Check

அடுத்த 5 நாட்களுக்கு ரெட் அலர்ட்!!

அடுத்த 5 நாட்களுக்கு ரெட் அலர்ட்!!

அடுத்த 5 நாட்களுக்கு ரெட் அலர்ட்!!
X

மும்பை உள்ளிட்ட இடங்களில் மிக கனமழை பெய்து வரும் நிலையில் 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மும்பையில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

mumbai-rains

தொடர் கனமழை காரணமாக உள்ளூர் ரயில்கள் பெரும்பாலானவை கால தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்திருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலட் கொடுத்திருக்கிறது.

kerala red alert

அடுத்த ஐந்து நாட்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. கனமழை எச்சரிக்கையுடன் பல்வேறு மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் கடலோரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

newstm.in

Next Story
Share it