ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிகார சண்டைக்கு நடுவே சிக்கிய செங்கோட்டையன் !!
ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிகார சண்டைக்கு நடுவே சிக்கிய செங்கோட்டையன் !!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தான் தற்போது தமிழகத்தில் தலைப்புச் செய்தி. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே வெளிப்படையாக வெடித்துள்ள மோதல்போக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரத்தை விட்டுக்கொடுக்க இருவரும் தயாராக இல்லை. அது எப்படி விட்டுக்கொடுப்பார்கள் என்பதும் சரியானது தான். ஆனால், இருவர் தரப்பிலும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை இரண்டாம்கட்ட தலைவர்கள் கூறி வருகின்றனர். இத பிரச்சனை தொடர்வதற்கு காரணமாக அமைகிறது. இந்த நிலையில் இருவரும் கட்சியில் அதிகாரத்துக்கு வேண்டாம், மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையனை பொதுச்செயலாளராக நியமிக்கலாம் என்று ஒருதரப்பினர் கூறி வருகின்றனர்.

ஆனால் இதையெல்லாம் செங்கோட்டையன் பொருட்படுத்தவில்லை. கட்சி தான் முக்கியம் என இரு தலைவர்களிடமும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று அவருடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கிருந்து ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு சென்றார். இருவரிடமும் சுமார் அரைமணிநேரம் அவர் பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து செங்கோட்டையன் மீண்டும் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தினார்.
இப்படி மாறிமாறி சென்று செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது இரு தலைவர்களையும் சமாதானம் செய்யும் முயற்சியே என்று கூறப்படுகிறது.
newstm.in

