Theme Check

அமலுக்கு வந்தது பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. இன்றைய விலை நிலவரம்

 

அமலுக்கு வந்தது பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. இன்றைய விலை நிலவரம்
X

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து நேற்றிரவு அறிவிப்பு வெளியிட்டது.

இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7, பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 45 நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

fd

இந்நிலையில், மத்திய அரசு கலால் வரியை குறைத்ததைத் தொடர்ந்து சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 8 ரூபாய் 22 காசுகள் குறைந்து 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 70 காசுகள் குறைந்து 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

newstm.in

Next Story
Share it