பெண் போலீசாருக்கான வேலை நேரம் குறைப்பு..!!
பெண் போலீசாருக்கான வேலை நேரம் குறைப்பு..!!

பெண் காவலர்கள் 12 மணி நேரத்துக்குப் பதிலாக 8 மணி நேரம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்று மும்பை மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மும்பையில் பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் மட்டுமே பணி புரியலாம் என்று போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே அறிவித்துள்ளார். இந்நிலையில், பெண் காவலர்களுக்கு சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் அவர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் புதிய ஆணையின்படி, பெண் காவலர்களுக்கு இரண்டு தெரிவுகள் அளிக்கப்படுகின்றன.
முதல் தெரிவு: காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அல்லது மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை அல்லது இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை என எதையேனும் ஒரு ஷிஃப்ட்டை அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
இரண்டாவது தெரிவு: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை அல்லது மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை அல்லது இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை.
பணியிடம் மற்றும் குடும்பம் என இரண்டையும் கையாள்வதில் பெண் காவலர்களுக்குப் போதுமான நேரம் கிடைக்கும் என்பதால், இந்த உத்தரவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.அவசர காலத்திலும், பண்டிகை காலத்திலும் அவர்களுக்கான பணி நேரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அல்லது துணை காவல் ஆணையர்களின் அனுமதியுடன் அதிகரிக்கலாம்” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

