இன்று இறுதி கட்ட வாக்கு பதிவு! பரபரக்கும் மேற்கு வங்கம்!
இன்று இறுதி கட்ட வாக்கு பதிவு! பரபரக்கும் மேற்கு வங்கம்!

இந்தியாவில் தமிழகம், கேரளம், புதுச்சேரி மற்றும் அஸ்ஸாம் , மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு மேற்கு வங்காளம் தவிர மற்ற 4 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் மட்டும் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் 7 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் இன்று இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக மம்தா, மோடி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான இறுதி கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.கொரோனா பரவல் அதிதீவிரமாக இருப்பதை அடுத்து அங்கு மாநிலத்தில் பேரணிகளை நடத்துவதற்கும், பிரச்சாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
இதனால் காணொலி மூலமே அரசியல் கட்சிகள் இறுதி கட்டத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.இன்று நடைபெறவுள்ள இறுதி கட்டத் தேர்தலில் 84,77,728 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இதில் 41.21 லட்சம் பேர் பெண்கள்; 158 பேர் மூன்றாம் பாலினத்தவா் .இந்த தேர்தலில் 4 மாவட்டங்களில் 283 வேட்பாளா்கள் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

