வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி.. விலை உயர்வு இப்போது இல்லை !
வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி.. விலை உயர்வு இப்போது இல்லை !

ஜவுளித்துறையினருக்கு நிம்மதி அளிக்கும் விதமாக ஜிஎஸ்டி விகிதத்தை 5 விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காடாக உயர்த்த எடுக்கப்பட்ட முடிவு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2022-23 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆலோசனை நடத்தினார். மத்திய நிதித்துறை இணை அமைச்சர், முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில நிதி அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஜனவரி 1 முதல்ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதமானது 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கலாம் என முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஜனவரி 1க்கு மேல் துணிகள் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.
மேலும், ஜவுளிப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதால், இதற்கு கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் ஜவுளித்துறையினருக்கு நிம்மதி அளிக்கும் விதமாக இந்த முடிவு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது அடுத்து வரும் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
.
newstm.in

