ரெம்டெசிவிர் மருந்துக்கு சுங்கவரி ரத்து! மத்திய அரசு அதிரடி!
ரெம்டெசிவிர் மருந்துக்கு சுங்கவரி ரத்து! மத்திய அரசு அதிரடி!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிதீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் ரெம்டெசிவிர் மருந்து மீதான இறக்குமதி வரிக்கு மத்திய அரசு விலக்களித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் " கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து மற்றும் அதன் மூலப்பொருள்கள், ரெம்டெசிவிர் ஊசி ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை அக்டோபர் 31,2021 வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து அந்த மருந்து, அதன் மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு ஏப்ரல் 11ம் தேதி மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது

