Theme Check

மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு ரத்து.. உச்சநீதிமன்றம் ! வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு ஆபத்தா?

மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு ரத்து.. உச்சநீதிமன்றம் ! வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு ஆபத்தா?

மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு ரத்து.. உச்சநீதிமன்றம் ! வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு ஆபத்தா?
X

உச்சநீதிமன்றம் 1992ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் படி எந்த ஒரு மாநிலத்திலும் இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. ஆனால், தனி இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர் பெரும் போராட்டம் நடத்தினர். நீண்ட காலம் இப்போராட்டம் நீடித்தது.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கு அசோக் புஷன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது, 1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். அதனை மறுபரிசீலினை செய்வதற்கான வாய்ப்பே இல்லை. அதன்படி மராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே போல அதற்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும் நீதிபதிகள் கூறினர்.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்த ஒத்துக்கீடு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் வராது. காரணம் அந்த இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாப்பை பெற்றது ஆகும்.

அதேநேரத்தில், தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளது. இதனை எதிர்த்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் இந்த தீர்ப்பால், வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வருமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it