Theme Check

கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தது.. பள்ளிகள் மீண்டும் திறப்பு..!

கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தது.. பள்ளிகள் மீண்டும் திறப்பு..!

கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தது.. பள்ளிகள் மீண்டும் திறப்பு..!
X

சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று வேகமாக உலக நாடுகளில் பரவத்தொடங்கியது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை உலக நாடுகளை அமல்படுத்தின.

அந்த வகையில், கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகளும் மூடப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், தொற்று பரவல் அதிகரிப்பால் மீண்டும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.

உலகின் பிற நாடுகளில் எல்லாம் கொரோனா பரவல் குறைந்து கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டாலும், உகாண்டாவில் மட்டும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடித்தன. பள்ளிகள் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்ததால், மாணவர்கள் பலர் சுரங்க பணிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனால், பள்ளிகள் எப்போது திறக்கும் என பெற்றோர்களும் மாணவர்களும் ஏங்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், உகாண்டாவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு திரும்பினர். கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டதால் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Next Story
Share it