இந்த நாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு..!
இந்த நாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு..!

இந்தியாவில் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள சர்வதேச பயணிகளுக்கு மத்திய விமான போக்குவரத்து துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அந்நாட்டு பயணிகளுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்ட பின்னர் ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று முன்னதாக அறிவித்த மத்திய விமான போக்குவரத்து துறை மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் உத்தரவின் பேரில் தற்போது அந்த கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. துபாயில் பணிபுரியும் பல்வேறு இந்திய குடிமக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

