Theme Check

40% இருந்தால் மட்டுமே கட்டுப்பாடுகள்!!

40% இருந்தால் மட்டுமே கட்டுப்பாடுகள்!!

40% இருந்தால் மட்டுமே கட்டுப்பாடுகள்!!
X

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 2000 கடந்து பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 2,652 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் 1,066 பேருக்கும், செங்கல்பட்டில் 375 பேருக்கும், கோவையில் 144 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன.

corona

அந்த வகையில், சென்னையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்.

வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக்கடைகள் போன்ற இடங்களில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

corona

இந்நிலையில், கொரோனா பாதித்தோரில் 40% பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தற்போது நோய் பாதித்தவர்களில் 95% பேர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 5% பேர் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனால் ஊரடங்கு கட்டுப்பாடு தேவைஇல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it