Theme Check

கட்டுப்பாடுகளை திரும்பப் பெறணும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

கட்டுப்பாடுகளை திரும்பப் பெறணும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

கட்டுப்பாடுகளை திரும்பப் பெறணும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!
X

இந்தியாவில், தொற்று பரவலுக்கு எதிரான மிகப்பெரிய பேராயுதமாக தடுப்பூசி கருதப்படுவதால், தடுப்பூசி செலுத்த மக்களை மத்திய - மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. அந்த வகையில், நாட்டில் இதுவரை 1,89,23,98,347 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட விவரங்களை வெளியிட உத்தரவிடுமாறு ஜகேப் புலியெல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட், ‘தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது.

எனவே, உரிய உத்தரவுகளை பின்பற்றுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். தடுப்பூசி செலுத்துமாறு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.

தடுப்பூசி செலுத்தாத தனி நபர்களுக்கு எதிராக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது. அதுபோன்று ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தால், அதை திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

Next Story
Share it