காஷ்மீரில் மீண்டும் பதிலடி.. பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை !!
காஷ்மீரில் மீண்டும் பதிலடி.. பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை !!

இந்தியாவின் காஷ்மீர் எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்கு ஊடுருவி தாக்குதல் நடத்த அவ்வப்போது திட்டமிட்டு வருகின்றனர். எனினும் இதனை இந்திய பாதுகாப்பு படையினர் முறியடித்து தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சார்ந்த ஒரு தீவிரவாதி, இன்று காஷ்மீர் குல்ஹாமில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் அவரது உடமைகளை சோதனை செய்தும், விசாரணையிலும், அவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சார்ந்த பாகிஸ்தான் தீவிரவாதி என தெரியவந்தது. இரண்டு ஆண்டுகளாக வடகிழக்கு காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்திருந்தார்.

தேடுதல் வேட்டையில் காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். தீவிரவாதிகள் தங்கியிருந்த இடத்தில் இருந்து பெருமளவிலான வெடிப்பொருட்களை பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டது. அண்மையில் காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கு சுரங்கப்பாதை தோண்டப்பட்டடிருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
இதன்மூலம் அவர்கள் இந்தியாவுக்கு ஊடுருவி தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டது அம்பலமானது. எனினும் அத்திட்டம் முறியடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
newstm.in

