Theme Check

2 வது மனைவியுடன் வசித்த ஓய்வு பெற்ற நீதிபதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

2 வது மனைவியுடன் வசித்த ஓய்வு பெற்ற நீதிபதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

2 வது மனைவியுடன் வசித்த ஓய்வு பெற்ற நீதிபதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!
X

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் நவ நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் மானப்பா தலவாரா (53). கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தாலுகா கோர்ட் நீதிபதியாக பணியாற்றிய இவர் சமீபத்தில் கட்டாய ஓய்வு பெற்றிருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த மானப்பா திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
Bagalkot: Retirement Of Second Marriage, Punishment Retired Judge Shoots  Suicide | Judge Manappa Talawar Commits Suicide By Shooting Self In Bagalkot  IG News - IG News
இதுபற்றி தகவல் அறிந்த நவநகர் போலீசார் விரைந்து சென்று நீதிபதி மானப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மானப்பாவுக்கு இரண்டு மனைவிகள். அவர்களில் ஒருவர் பெங்களூருவில் நீதிபதியாக இருக்கிறார், மற்றொரு மனைவியுடன் அவர் நவ நகரில் வசித்து வந்தது தெரியவந்தது.

மானப்பா தலவாராவின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நவ நகர் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it