Theme Check

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது – விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!!

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது – விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!!

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது – விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!!
X

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறைப்பு பற்றி தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசில் 12 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது.

ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் நிதிச் சிக்கல்களை சந்தித்து வந்த நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

eps

கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் அலை தீவிரமடைந்த போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த நிலையில், அரசு ஊழியர்களின் ஒய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக குறைக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், ஆயிரக்கணக்கானோர் உடனடியாக ஓய்வு பெறும் நிலை ஏற்படும்.

sec

தற்போதைய நிதி நெருக்கடி சூழலில் ஓய்வு பெறுவோருக்கு உடனடியாக பணப்பயன்கள் வழங்கப்படாது என்றும் அதற்கு பதில் அரசு பத்திரம் வழங்கும் முடிவும் பரிசீலனையில் இருப்பதாகவும், குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் அதனை பணமாக்கிக் கொள்ளலாம் என்றும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

Next Story
Share it