Theme Check

மீண்டும் வரும் வேளாண் சட்டங்கள்? மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு !

மீண்டும் வரும் வேளாண் சட்டங்கள்? மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு !

மீண்டும் வரும் வேளாண் சட்டங்கள்? மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு !
X

மத்திய அரசு கொண்டு வந்த 3 சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, டெல்லி எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இதன்பலனாக இந்த சட்டங்களை ரத்து செய்வதாக கடந்த மாதம் திடீரென அறிவித்தார் பிரதமர் மோடி. மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே இச்சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவையும் நிறைவேற்றினார்.

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு இந்த திடீர் முடிவை அவர் எடுத்ததாக கூறப்பட்டு வருகிறது. எனினும் பின்னாளில் வேளாண் சட்டங்களை வேறு வடிவங்களில் மத்திய அரசு கொண்டுவரலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

farmer

இந்த நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், வேளாண் சட்டங்கள் ரத்து விவகாரத்தில் மத்திய அரசு ஒரு அடி பின்வாங்கி உள்ளது. ஆனால், விரைவில் மீண்டும் முன்னோக்கி செல்லும்.

சுதந்திர இந்தியாவில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடியின் தலைமையில் செய்யப்பட்ட மிகப்பெரிய விவசாய சீர்த்திருத்தம் இது. ஆனால், சிலருக்கு அது பிடிக்கவில்லை. விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. அது பலமாக இருந்தால்தான், நாடும் பலமாக இருக்கும் என்றார்.

farmer

மத்திய அமைச்சர் தோமரின் பேச்சின் மூலம், ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்களை தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசு மீண்டும் கொண்டு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


newstm.in

Next Story
Share it