Theme Check

நோ பார்க்கிங் வாகனத்தை ஃபோட்டோ எடுத்து அனுப்பினால் சன்மானம்!!

நோ பார்க்கிங் வாகனத்தை ஃபோட்டோ எடுத்து அனுப்பினால் சன்மானம்!!

நோ பார்க்கிங் வாகனத்தை ஃபோட்டோ எடுத்து அனுப்பினால் சன்மானம்!!
X

நோ பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அதை படம் பிடித்து அனுப்புவோருக்கு வெகுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துவோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை படம் எடுத்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்புவோருக்கு 500 ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் கூறினார். தவறான பார்க்கிங் கவனிக்கப்படாமல் போவது ஒரு பெரிய பிரச்னை என்றார்.

money

சில நேரங்களில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கார் இருக்கும் என்றும், அதற்கேற்ப பார்க்கிங் இடங்களை அமைக்காமல் சாலைகளை ஆக்கிரமித்து வாகனங்களை மக்கள் நிறுத்துவது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

மேலும் நாக்பூரில் உள்ள தனது சொந்த வீட்டை உதாரணமாகக் காட்டி, தனக்கு 12 பார்க்கிங் இடங்கள் இருப்பதாகவும், தனது கார்கள் எதுவும் சாலையோரத்தில் நிறுத்தப்படுவதில்லை என்றும் கூறினார். டெல்லியில், மக்கள் சாலைகளை தங்கள் பார்க்கிங் இடமாக கருதுகிறார்கள் என்று கட்கரி குறிப்பிட்டார்.

newstm.in

Next Story
Share it