கான்பூரில் மகளின் கண்முன்னே தந்தையை தாக்கிய வலதுசாரிகள்...
கான்பூரில் மகளின் கண்முன்னே தந்தையை தாக்கிய வலதுசாரிகள்...

உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிடக் கோரி இஸ்லாமியர் தாக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், வலதுசாரிகள் சிலர் கும்பலாகச் சேர்ந்து இஸ்லாமிய இளைஞரை கொடூரமாகத் தாக்கி இழுத்துச் செல்கிறார்கள். அப்போது அவர்களிடம் சிறுமி ஒருவர் தனது தந்தையை அடிக்கவேண்டாம் எனக் கதறி அழுகிறார். அப்போதும் காவித்துண்டு அணிந்திருந்த அந்த கும்பல் விடாமல் அவரை தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், இஸ்லாமிய இளைஞரை அந்த கும்பலிடமிருந்து மீட்டு அழைத்துச் சென்றனர். பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், ரிக்ஷா ஓட்டும் தொழிலாளியான அப்சார் அஹமது என தெரியவந்தது. மேலும் அந்தச் சிறுமி அவரது குழந்தை என்றும் தெரியவந்தது.
இதையடுத்து அப்சார் அஹமது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இஸ்லாமிய வாலிபர் மீதான தாக்குதலுக்குக் காரணமாக இருந்த அஜய், ராகுல் குமார், அமர் குப்தா ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமாகவே இருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த பாஜகவினர் போராட்டத்தில் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான கோஷங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
कानपुर: वरुण विहार में कुछ दिन पहले एक महिला द्वारा मुस्लिम युवक पर जबरन धर्म परिवर्तन कराने का आरोप लगाया गया था, जिसके बाद बजरंग दल के लोगों ने युवक की जमकर पिटाई की थी, मासूम बच्ची लगातार लगा रही थी पिता को बचाने की गुहार लेकिन पुलिस बनी रही मूकदर्शक।#UttarPradesh #UPPolice pic.twitter.com/NLSicpNOCw
— UP Tak (@UPTakOfficial) August 11, 2021

