இந்தியாவில் அதிகரித்து வரும் ஓமிக்ரான் பாதிப்பு.. அடுத்து என்ன நடக்கும் என மக்கள் அச்சம் !!
இந்தியாவில் அதிகரித்து வரும் ஓமிக்ரான் பாதிப்பு.. அடுத்து என்ன நடக்கும் என மக்கள் அச்சம் !!

தென் ஆப்ரிக்காவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இந்தியாவிலும் தற்போது பரவிவிட்டது. மற்ற வகை கொரோனா தொற்றுகளை விட ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக மற்றவர்களுக்கு பரவும் தன்மைக்கொண்டது என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
எனவே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்தியாவிலும் ஓமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நேற்று மேலும் 2 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலமாக அந்த மாநிலத்தில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் ராஜஸ்தானில் ஓமிக்ரான் பாதிப்பு 13 ஆக அதிகரித்துள்ளது. குஜராத், கர்நாடகாவில் தலா 3 பேருக்கும், டெல்லியில் 2 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. ஆந்திரா, சத்தீஸ்கர், கேரளாவில் தலா ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே லாக்டவுன் காரணமாக பெரும் இன்னல்களை சந்தித்த மக்கள் தற்போதும் லாக்டன் வருமா என அச்சத்தில் உள்ளனர்.
newstm.in

