Theme Check

துணிச்சலுடன் கொள்ளை.. தப்பும்போது கலகலப்பு பட பாணியில் சிக்கிய கொள்ளையன் !!

துணிச்சலுடன் கொள்ளை.. தப்பும்போது கலகலப்பு பட பாணியில் சிக்கிய கொள்ளையன் !!

துணிச்சலுடன் கொள்ளை.. தப்பும்போது கலகலப்பு பட பாணியில் சிக்கிய கொள்ளையன் !!
X

கொள்ளையடிக்க சென்று 'கலகலப்பு’ பட பாணியில் ஜன்னலில் இளைஞர் சிக்கிக் கொண்டு தவித்த சம்பவம் பரபரப்பானது.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜாடுபுடியில் உள்ளது பிரசித்தி பெற்ற கோவில் எல்லையம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதங்களில் விமரிசையாக திருவிழா நடைபெறும். அந்த வகையில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுட திருவிழா கடந்த மாதம் கோலாகலமாக நடந்தது முடிந்தது. அப்போது பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர்.

kalakalappu thirudan

இதனை தூரநின்று பார்த்த இளைஞர் ஒருவர், இரவில் கோவிலுக்குள் புகுந்துள்ளார். பின்னர், கருவறையில் இருந்த அம்மன் தங்க வெள்ளி நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு ஜன்னல் வழியோ வெளியே வர முயற்சித்து உள்ளார். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை. நீண்ட நேரம் வெளியே வர போராடியதால் கலைப்பு ஏற்பட்டு அப்படியே தூங்கி உள்ளார்

kalakalappu thirudan

இந்த நிலையில் இன்று காலை பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஜன்னலில் சிக்கி இருந்த திருடனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஜன்னலில் சிக்கியிருந்த கொள்ளையனை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்தது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுறு ஜன்னலில் சிக்கியிருந்த திருடனை மீட்டனர். தற்போது அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலில் புகுந்து திருடிவிட்டு வெளியே செல்லும் போது சிக்கி தவித்து போலீசாரிடம் மாற்றிக்கொண்ட திருடனின் நிகழ்வு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it