“லிஃப்ட்” கொடுப்பது போல் நடித்து துப்பாக்கி முனையில் கொள்ளை!!
“லிஃப்ட்” கொடுப்பது போல் நடித்து துப்பாக்கி முனையில் கொள்ளை!!

ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் தனியார் நிறுவன ஊழியருக்கு காரில் லிப்ட் கொடுப்பது போல நடித்து துப்பாக்கி முனையில் ரூ.90,000 கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபரிதாபாத்தை சேர்ந்த அஜய் பிஷ்ட் என்பவர் சாலையோரம் காத்திருந்த போது அங்கு காரில் வந்த மூன்று பேர் அவருக்கு லிஃப்ட் கொடுத்துள்ளனர். கார் சிறிது தூரம் சென்றதும் காரில் இருந்த மூவரில் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி அஜய்யிடம் 5 ரூபாய் பறித்தார்.
தொடர்ந்து டிஜிட்டல் பேமெண்ட் சேவை மூலமாக கொள்ளையர்கள், அஜயின் வங்கிக் கணக்கில் இருந்த 85 ஆயிரம் ரூபாயை தங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பிக் கொண்டனர். மேலும் அவரது செல்போனையும் பறித்தனர்.

பின்னர் யாரும் இல்லாத இடத்தில் அவரை இறக்கிவிட்டு மூன்று கொள்ளையர்களும் தப்பிச் சென்றனர். அந்த வழியாக சென்ற நபர் ஒருவரின் உதவியுடன் குடும்பத்தினருக்கும், போலீசாருக்கும் அஜய் தகவல் கொடுத்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

