துப்புரவுப் பணியில் ரோபோ : 5 மனிதர்கள் செய்யும் துப்புரவுப் பணியை ஒரு ரோபோ செய்யும் !!
துப்புரவுப் பணியில் ரோபோ : 5 மனிதர்கள் செய்யும் துப்புரவுப் பணியை ஒரு ரோபோ செய்யும் !!

குஜராத் மாநிலம் வதோதரா மாநகராட்சி முதன்முறையாக, துப்புரவுப் பணிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் ரோபோவை ஈடுபடுத்தியுள்ளது.
மத்திய குஜராத்தில் உள்ள விஜ் கம்பெனி லிமிடெட் தனது நிறுவன சமூக சேவை முயற்சியின்கீழ், வதோதரா மாநகராட்சிக்கு சூரிய சக்தியில் இயங்கும் ரோபோ ஒன்றை வழங்கியது.இந்த ரோபோவில் கேமரா, ஜிபிஎஸ், வாயு வெளியேறுவதை உணரும் திறன் கொண்ட சென்சார் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது, சாக்கடை அடைப்புகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களையும் பிரித்து அளிக்கும் வல்லமை கொண்டது.
“5 மனிதர்கள் செய்யும் துப்புரவுப் பணியை ஒரு ரோபோ இயந்திரம் மற்றும் இரண்டு மனிதர்களைக் கொண்டு எளிதாக முடித்து விடலாம்” என, வதோதரா மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.
Tags:
Next Story

