Theme Check

முதலமைச்சர் ஸ்டாலினுடன் ரோஜா சந்திப்பு!!

முதலமைச்சர் ஸ்டாலினுடன் ரோஜா சந்திப்பு!!

முதலமைச்சர் ஸ்டாலினுடன் ரோஜா சந்திப்பு!!
X

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஆந்திர எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா சந்தித்து பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, தனது நகரி தொகுதி தமிழக எல்லையில் இருப்பதால், தொகுதி தொடர்பான விஷயங்களை முதல்வரிடம் தெரிவித்ததாகவும், மனுவைப் படித்துவிட்டு, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார் என்றும் கூறினார்.

மேலும், தனது தொகுதியில் தமிழ்வழிப் பள்ளிகள் உள்ளதாகவும், அதற்காக 1 முதல் 10ஆம் வகுப்பு வரை 1,000 தமிழ்ப் பாடப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை அனுப்பி வைப்பதாக முதல்வர் உறுதியளித்தார் என்று கூறினார்.

roja

திருத்தணி விஜயபுரம் பகுதிதமிழக எல்லையில் அமைந்துள்ளது. இங்கு தொழிற்பேட்டைக்காக 5,600 ஏக்கர் நிலத்தை ஆந்திர தொழில் உட்கட்டமைப்புக் கழகம் ஆர்ஜிதம் செய்துள்ளது. இந்த தொழிற்பேட்டைக்கு இணைப்பு சாலை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த சாலை அமைக்கப்பட்டால் தமிழகத்தில் இருந்து கனரக வாகனங்கள் எளிதில் வரமுடியும். தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி நீண்ட நாட்களாகிவிட்டதால், முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்று ரோஜா கூறினார்.

ரோஜாவும், அவரது கணவர் ஆர்.கே.செல்வமணியும் முதல்வரின் உருவம் பொறித்த சால்வையை பரிசாக வழங்கினர்.

newstm.in

Next Story
Share it