Theme Check

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி தூக்கிட்டு தற்கொலை!!

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி தூக்கிட்டு தற்கொலை!!

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி தூக்கிட்டு தற்கொலை!!
X

மதுரையில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த லோகபிரபு - துர்காதேவி தம்பதி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து போலீஸார் அங்கு சென்று இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் தம்பதி தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், லோகபிரபுவும், துர்காதேவியும் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.

mdu suicide

இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில்தான் இவர்கள் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காதல் ஜோடிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

newstm.in

Next Story
Share it