சத்துணவில் அழுகிய முட்டை – தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!!
சத்துணவில் அழுகிய முட்டை – தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!!

கரூர் மாவட்டம் நாகனூர் அரசுப் பள்ளியில் அழுகிய முட்டைகள் வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகனூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் கெட்டுப்போன மற்றும் அழுகிய முட்டைகள் சத்துணவில் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துவந்தது.
இதுகுறித்து ஊர் பொதுமக்கள் கேட்க சென்றபோது, சத்துணவிற்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகள் அழுகியும், புழுக்கள் நெலிந்தும் இருந்துள்ளது. இதனை சிலர் வீடியோவா எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கவேண்டிய முட்டை அழுகியிருந்த சம்பவம் குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரும், ஊர் பொது மக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
புகாரின் அடிப்படையில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, நேரில் சென்று ஆய்வு செய்தார். கையிருப்பு இந்த அனைத்து முட்டைகளையிம் தண்ணீரில் கொட்டி சோதனை செய்த அவர், அங்கிருந்த உணவுப் பொருட்களின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து நாகனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் , சத்துணவு அமைப்பாளர் , சமையலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
newstm.in

