Theme Check

யூடியூப்பர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்த ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சி.. அதிகாரிகள் சீல் !!

யூடியூப்பர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்த ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சி.. அதிகாரிகள் சீல் !!

யூடியூப்பர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்த ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சி.. அதிகாரிகள் சீல் !!
X

முதலில் ஒரு கவுண்டமனி காமெடியை உங்களுக்கு நியாபகப்படுத்த விரும்புகிறேன். அதாவது 'அடடா வர வர இந்த நாட்ல தொழிலதிபர் தொல்ல தாங்க முடியலப்பா, டேய் சீக்கிரம் வாங்கடா.. புண்ணாக்கு விக்குறவன், குண்டூசி விக்குறவன் எல்லாம் தொழிலதிபர்னு' அப்படினு மன்னன் திரைப்படத்தில் கவுண்டமனி கூறும் காமெடியை யாராலும் மறக்க முடியாது. இப்படியொரு காமெடிக்கும் இந்த செய்திக்கும் ஒரு தொடர்வு உள்ளது.

அதாவது, இன்று ஒரு செல்போன் மட்டும் வைத்துக்கொண்டு பணத்துக்காக எந்த கொள்கையும் கோட்பாடும் இன்றி, எதைபற்றியும் கவலைப்படாமல் கண்டதையும் யூடியூப்பில் வீடியோவாக பகிர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பெயர் யூடியூப்பர் என்றும் கூறிக்கொண்டு பிரபலமாகிவிடுன்றனர். எந்த தகவலையும் உறுதிப்படுத்தாமல் மக்களுக்கு தெரியப்படுத்துவதால் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பெயரும் பணமும் கிடைத்துவிடுகிறது.

youtube

அந்த வகையில் தற்போது சிக்கல் சிக்கியுள்ளார் பிரபல யூடியூப் விமர்சகர் இர்பான். இவர் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து விளம்பரம் செய்த ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளது தான் இதற்கு காரணம். யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக பதிவு இடுவார்.

இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். இதன் மூலம் இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று பல ஹோட்டல்களில் சாப்பிட்டு Review போட்டு வருகிறார். இதற்கு பல லட்சங்களை சம்பளமாக வாங்குகிறார். ஆனால், இவர் புகழ்ந்து தள்ளி பல ஹோட்டல்களின் தரம் சரியில்லை என்று புகார் கூட எழுந்தது.

இந்தநிலையில் இவர் சாப்பிட்டு ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிய ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சிகள் பரிமாறப்பபட்டு இருந்ததால் உணவு துறை அதிகாரிகள் சீல் வைத்து இருக்கின்றனர். சென்னை அண்ணா நகரில் ரோஸ் வாட்டர் என்ற உணவகம் ஒன்று சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு பல youtube விமர்சகர்கள் சென்று தங்களின் reviewவை கொடுத்து விளம்பரம் செய்தனர்.

youtube

இப்படி ஒரு நிலையில் இந்த உணவகத்தில் பரிமாறப்பட்ட இறால் வகை உணவுகள் கெட்டுப் போய் இருந்ததாக வந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டனர். அதில் இந்த உணவகத்தை பற்றிய பல அதிர்ச்சியான விஷயங்கள் வெளியாகி இருக்கிறது. உணவுகள் அழுகிய நிலையில் இருந்ததும், கெட்டுப்போனதும், அதிக நாட்கள் பதப்படுத்தப்பட்டு வைத்திருந்ததும் அம்பலமானது.

மேலும் அதிகாரிகள் நடத்திய அந்த ஆய்வில் அந்த ஹோட்டலில் கெட்டுப்போன 10 கிலோ இறால் 45 கிலோ சிக்கன் மட்டன் உள்ளிட்ட உணவை சோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். மேலும், இந்த ஆய்வு முடியும் வரை ஹோட்டலை நடத்தக் கூடாது என்று அந்த உணவகத்தை மூடி அதிகாரிகள் பூட்டு போட்டு இருக்கிறார்கள்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆனதை தொடர்ந்து இந்த ஹோட்டலில் சாப்பிட்டு ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வீடியோ வெளியிட்ட இர்ஃபான் உள்ளிட்ட யூடியூப்பர்களை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it