அடுத்த சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்.. இப்போ என்ன சாதனை தெரியுமா?
அடுத்த சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்.. இப்போ என்ன சாதனை தெரியுமா?

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாரி 2'. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தைப்போன்றே பாடல்களுக்கும் ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். குறிப்பாக ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து மிகப்பெரும் வெற்றியை பெற்றது. துள்ளல் இசையுடன் தனுஷ்- சாய் பல்லவி அசத்தல் நடனத்துடன் இப்பாடல் பிரபலமானது.இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார்.
யூடியூப்பில் அதிக நபர்களால் பார்க்கப்பட்டு வந்த இப்பாடலின் வீடியோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், ரவுடி பேபி பாடல் வீடியோ யூடியூபில் 5 மில்லியன் லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. தென்னிந்திய அளவில் வெளியான பாடல்களில் 5 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் யூடியூபில் இதுவரை 118 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

