Theme Check

ரவுடிசம்.. விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் கைது !!

ரவுடிசம்.. விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் கைது !!

ரவுடிசம்.. விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் கைது !!
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்களை மிரட்டி ரவுடிகள் பணம் பறிப்பதாகவும், கொலை, கொலை முயற்சி போன்ற சம்பவம் அதிகரித்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் சென்னை புறநகர் மாவட்டங்களாக உள்ளாகும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆவார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரவுடிகளை ஒதுக்குவதற்கு சிறப்பு தனிப்படைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் ரவுடி மற்றும் கட்டபஞ்சாயத்து வேலையில் ஈடுபட்டு வரும் படப்பை குணா என்பவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

velladurai

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த படப்பை குணா திடீரென தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.

இதனை அடுத்து அவருடைய ஆதரவாளர்களை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர். படப்பை குணாவிற்கு வலது கரமாக செயல்பட்டு வந்த போந்தூர் சிவா கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். படப்பை குணாவிற்கு சொந்தமான ஜேசிபி ,லாரி உள்ளிட்ட 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

velladurai

இந்த நிலையில், படப்பை குணாவின் ஆதரவாளராக கருதப்படும் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் தென்னரசு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது, சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் விஜயகாந்த் என்பவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அரசு ஊழியரை தகாத வார்த்தையில் பேசியதாகவும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளின் அண்ணன் திருநாவுக்கரசையும் இதே வழக்கில் கைது செய்துள்ளனர் . எனினும் தென்னரசு, திருநாவுக்கரசு ஆகிய இருவரும் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். ரவுடிவுடன் கூட்டு வழக்கில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஒரு கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Next Story
Share it