Theme Check

பீஸ்ட் இடைவேளைக்கு பிறகு ஒளிபரப்பான ஆர்ஆர்ஆர் படம்.. ஆத்திரத்தில் ரசிகர்கள் !!

பீஸ்ட் இடைவேளைக்கு பிறகு ஒளிபரப்பான ஆர்ஆர்ஆர் படம்.. ஆத்திரத்தில் ரசிகர்கள் !!

பீஸ்ட் இடைவேளைக்கு பிறகு ஒளிபரப்பான ஆர்ஆர்ஆர் படம்.. ஆத்திரத்தில் ரசிகர்கள் !!
X

மதுரையிலுள்ள திரையரங்கு ஒன்றில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாதிக்கு பதில் ஆர்ஆர்ஆர் படம் திரையிடப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நடிகர் விஜய்யின் 65ஆவது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியானது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள். ஆனால் படம் தங்களின் எதிர்பார்ப்பை திருப்தி படுத்தவில்லை என விஜய் ரசிகர்களே ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர். பல்வேறு தரப்பில் இப்படத்துக்கு கலவையான விமர்சனங்களும் கிடைத்துள்ளது.

rrr

இந்நிலையில் மதுரையிலுள்ள ஒரு திரையரங்கில் பீஸ்ட் படத்தின் இடைவேளை முடிந்து பின்னர் இருக்கையில் சென்று அமர்ந்தனர். ஆனால், இரண்டாம் பாகத்திற்கு பதில், எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் திரையிடப்பட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது. இதனால் கோபமான ரசிகர்கள் ஆபரேட்டர் ரூமை நோக்கி டார்ச் அடித்து கூச்சலிட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் ஆர் ஆர் ஆர் படத்தை நிறுத்தி விட்டு, விளம்பரங்கள் ஒளிபரப்பட்டது. அதைத் தொடர்ந்து பீஸ்ட் படம் திரையிடப்பட்டது.

newstm.in


Next Story
Share it