அதிமுக எம்எல்ஏ காரில் ரூ.1 கோடி பறிமுதல்.. பறக்கும் படையினர் அதிரடி !!

அதிமுக எம்எல்ஏ காரில் ரூ.1 கோடி பறிமுதல்.. பறக்கும் படையினர் அதிரடி !!

அதிமுக எம்எல்ஏ காரில் ரூ.1 கோடி பறிமுதல்.. பறக்கும் படையினர் அதிரடி !!
X

அதிமுக வேட்பாளர் மகனின் காரில் பணத்தைக் கொண்டு சென்றதாக மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி - கரூர் சாலையில் பெட்டவாய்த்தலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த நிறுத்தி சோதனையிட முயன்றனர். இதனை உணர்ந்த காரில் இருந்தவர்கள் உடனே காரில் சாக்குமூட்டையில் பணத்தை வெளியே வீச முயன்றனர். எனினும் அதனை பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர்.

உடனே காரை சுற்றிவளைத்த அதிகாரிகள் காரில் சோதனை செய்தனர். அப்போது சாக்குமூட்டையில் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காரில் பயணித்த நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கார் முசிறி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செல்வராசு மகன் ராமமூர்த்திக்கு சொந்தமானது என்பது உறுதியானது. தற்போதும் அத்தொகுதியில் செல்வராசு போட்டியிடுகிறார். மேலும் தொட்டியம் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சத்திய ராஜா, எம்.எல்.ஏ. செல்வராசு ஓட்டுநர் ஜெயசீலன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் நான்கு பேர் பயணித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பணத்துடன் காரை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் நிசாந்த் கிருஷ்ணாவிற்கு தகவல் அளித்தனர். மேலும் வருமான வரித்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் ரொக்கம் திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நான்கு பேரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் ஆங்காங்கே சிறிய தொகையாக பிடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு கோடி ரூபாய் ,500 ரூபாய் கட்டுகளாக பிடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கு சொந்தமான காரிலேயே கடத்தப்பட்ட சம்பவம் முசிறி தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதா? இது எங்கிருந்து கொண்டு செல்லப்படுகிறது யார் இந்த ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக எம்.எல்.ஏ. செல்வராசு அறிவுறுத்தலின்பேரில் பணம் கொண்ட செல்லப்பட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அதிமுகவை சேர்ந்த அரசியல் பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா? யாரிடம் பணத்தை பெற்றுச்செல்கின்றனர் என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it