Theme Check

ஓடும் பேருந்தில் வைர நகைகள் கொள்ளை! சிசிடிவி காட்சி வெளியீடு!!

தனியார் சொகுசு பேருந்தில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை..

ஓடும் பேருந்தில் வைர நகைகள் கொள்ளை! சிசிடிவி காட்சி வெளியீடு!!
X

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிரபல நகைக்கடையின் கிளை கோவையில் செயல்பட்டு வருகிறது. இதற்காக கடையின் ஊழியர் கவுதம்(26) உள்பட 3 பேர் ஹைதராபாத்தில் இருந்து 1 கோடி மதிப்புள்ள வைரம் பதித்த நகைகள் மற்றும் தங்க நகைளை நேற்று முன்தினம் கோவைக்கு கொண்டு சென்றனர். இவர்கள் வந்த சொகுசு பஸ் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் வந்தது. அங்குள்ள ஓட்டலில் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். கவுதம் மற்றும் அவருடன் வந்தவர்கள், நகை பையை இருக்கையின் கீழ் பகுதியில் வைத்து விட்டு சாப்பிட சென்றனர். பின்னர் வந்து பார்த்த போது பை மட்டுமே இருந்தது.

ஓடும் பேருந்தில் வைர நகைகள் கொள்ளை! சிசிடிவி காட்சி வெளியீடு!!

ஆனால் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், சொகுசு பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவு ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினார். அதில் நகைகளை இளைஞர் ஒருவர் எடுத்துச்செல்வது பதிவாகியிருந்தது. பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, அந்த நபர் பஸ்சுக்குள் ஏறி பையில் இருந்த நகை பாக்சை மட்டும் எடுத்து சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் இறங்கி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதை வைத்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it