கொரோனா நிதியாக ஒருவருக்கு ரூ.1 லட்சம்! நாடாளுமன்றம் ஒப்புதல்!!
கொரோனா நிதியாக ஒருவருக்கு ரூ.1 லட்சம்! நாடாளுமன்றம் ஒப்புதல்!!

அமெரிக்காவில் கொரோனா நிவாரணமாக ஒருவருக்கு ஒரு லட்சம் வழங்கும் மசோதாவுக்கு செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலகிலேயே அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. சமீபத்தில் அங்கு ட்ரம்ப் தோல்வி அடைந்து ஜோ பைடன் அதிபராக பதவியேற்று கொண்டார்.
பதவி ஏற்றதும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் ஜோ பைடன். அதாவது, கொரோனா நிவாரண நிதியாக ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

ஜோ பைடனின் அறிவிப்பு குறித்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா வெற்றி பெற்றது.
எனவே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக செனட் சபை தெரிவித்தது. அதனால் கொரோனா நிவாரண நிதி ஒரு லட்ச ரூபாய் விரைவில் அனைத்து அமெரிக்கர்களின் வங்கிக் கணக்கில் விரைவில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்க மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
newstm.in

