கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு !
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு !

கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவி பெரும் அச்சுறுத்தலையும் அழிவையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் அலையை விட இரண்டாம் அலையில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கு அறிவித்து கொரோனாவை கட்டுப்படுத்தி வருகின்றன.

மேலும் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா இரண்டாவது அலையில் இதுவரை மத்தியப்பிரதேசத்தில் 3,500 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இலவச கல்வி, இலவச குடும்ப அட்டை, வட்டியில்லா கடன் தரப்படும் என்றும் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார்.

ஏற்கனவே, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
newstm.in

