Theme Check

ரூ.1 லட்சம் சம்பளம்.. என்எல்சியில் 238 காலியிடங்கள்.. விண்ணப்பிக்க 5ம் தேதி கடைசி..!

ரூ.1 லட்சம் சம்பளம்.. என்எல்சியில் 238 காலியிடங்கள்.. விண்ணப்பிக்க 5ம் தேதி கடைசி..!

ரூ.1 லட்சம் சம்பளம்.. என்எல்சியில் 238 காலியிடங்கள்.. விண்ணப்பிக்க 5ம் தேதி கடைசி..!
X

நெய்வேலி என்எல்சியில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்துடன் 238 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பொறியியல் பட்டதாரிகள் வருகின்ற ஜனவரி 5-ம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி நிறுவனம் தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் அவ்வப்போது அப்ரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகும்.

அதன்படி தற்போது 2021-ம் ஆண்டிற்கான அப்ரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு Mechanical, Electrical, Civil மற்றும் Mining போன்ற பல்வேறு பிரிவுகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே என்எல்சி நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள இளைஞர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

காலியாக உள்ள பணியிடங்கள் விவரம்:
Junior Engineer Trainee ( Mechanical ) – 95
Junior Engineer Trainee ( Electrical)- 101
Junior Engineer Trainee (Civil) – 3
Junior Engineer Trainee ( Mining)-18

கல்வித்தகுதி:
இளநிலை பொறியாளர் டிரெய்னி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Mechanical, Electrical, Civil மற்றும் Mining போன்ற துறைகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:
01.10.2021 தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது கணக்கிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வருகின்ற ஜனவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் அனைவரும் எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

சம்பள விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,100 முதல் ரூ. ஒரு லட்சம் சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சியில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி இளநிலை உதவியாளர் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it