பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் டெபாசிட் - முதல்வர் அதிரடி !
பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் டெபாசிட் - முதல்வர் அதிரடி !

இந்தியாவில் கொரோனாவின் கோரம் இன்னும் குறையவில்லை. எனினும் பல மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தில் இருந்து குறைந்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
முதல் அலையை விட இரண்டாது அலையில் தான் பாதிப்பும் இழப்பும் அதிகமாக உள்ளது. அதிலும் பல நகரங்களில் தாய் தந்தை இருவரையும் குழந்தைகள் கொரோனாவுக்கு பறிகொடுத்து குழந்தைகள் தனியாக நிற்றும் சோகம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மாநில, மத்திய அரசுகளும் கொரோனாவினால் அநாதையான குழந்தைகள் தொடர்பாக திட்டங்களை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:
நாட்டில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா 2ஆவது அலையால் குழந்தைகளின் நிலை பாதுகாப்பற்ற சூழலுக்குச் சென்றுள்ளது, அதிகமான பாதிப்பை குழந்தைகள்தான் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் தாய், தந்தையை இழந்து குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆந்திர மாநில அரசு குழந்தைகளின் நலனுக்காக புதிய திட்டத்தை அறிவிக்கிறது. இதன்படி, கரோனாவில் பாதிக்கப்பட்டு தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஆந்திர அரசு சார்பில் ரூ.10 லட்சம் வங்கியில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்படும். இந்த தொகையின் மூலம்கிடைக்கும் வட்டியை குழந்தையை பராமரிக்கும், வளர்க்கும் பாதுகாவலர் எடுத்துக்கொண்டு, அந்த குழந்தையை கவனிக்க வேண்டும்.
ஆதரவற்ற நிலைக்குச் சென்ற குழந்தையை அடையாளம் கண்டு அவர்களின் பெயரில் இந்த வைப்புத் தொகையை செலுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் பிளாக் ஃபங்கஸ் தொற்றால் ஆந்திராவில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கையை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

