Theme Check

உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
X

நெல்லையில், பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயமடைந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. அதில், சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரு மாணவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இவர்கள் தவிர சஞ்சய், இசக்கி பிரகாஷ், ஷேக் அபுபக்கர், அப்துல்லா ஆகிய 4 மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயமடைந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Next Story
Share it