Theme Check

ரூ.1.21 கோடி மோசடி புகார்.. அதிமுக நகர செயலாளர் கைது !!

ரூ.1.21 கோடி மோசடி புகார்.. அதிமுக நகர செயலாளர் கைது !!

ரூ.1.21 கோடி மோசடி புகார்.. அதிமுக நகர செயலாளர் கைது !!
X

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் செம்மடையைச் சேர்ந்தவர் அசோக் ராம்குமார் (40). பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ராமமூர்த்தி என்பவர் அறிமுகம் கிடைத்தது. இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். அறிமுகம் கிடைத்தது முதல் அசோக் ராம்குமார் - ராமமூர்த்தி இடையே வர்த்தக ரீதியாக பழக்கம் உண்டாது.

அசோக் ராம்குமார் நூலை அனுப்பினால், அதனை துணியாக மாற்றி அனுப்பும் நிட்டிங் நிறுவனத்தை ராமமூர்த்தி நடத்தி வந்தார். இந்த நிலையில், பல்லடம் நகர அதிமுக செயலாளர் ராமமூர்த்தி பதவிக்கு வந்தார்.

fg

இந்த சூழலில் கடந்த ஆண்டு ராமமூர்த்திக்கு அனுப்பிய ஒரு லட்சம் கிலோ நூலை துணியாக மாற்றி அனுப்பாமல், தன்னை மோசடி செய்துவிட்டதாக திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அசோக்குமார் புகார் அளித்தார். அதில், நூலின் மதிப்பு ரூ.1 கோடியே 21 லட்சத்து 66 ஆயிரம். இதுதொடர்பாக கேட்டால் மிரட்டல் விடுக்கிறார் என்றும் தன்னை ஏமாற்றிய அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது நூலை மீட்டுத் தர வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

புகாரின்பேரில் ராமூர்த்தி மீதும், அவரது நிறுவன கணக்காளர் சங்கர் கணேஷ் (41) மீதும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கடந்த 30ஆம் தேதி வழக்கு பதிந்தனர். இதைத் தொடர்ந்து பல்லடம் நகர அதிமுக செயலாளரான ராமமூர்த்தியை, குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it