அடேங்கப்பா...! 10 நொடிகளுக்கு ரூ.12.5 லட்சம்!! களை கட்டும் ஐபிஎல்!
அடேங்கப்பா...! 10 நொடிகளுக்கு ரூ.12.5 லட்சம்!! களை கட்டும் ஐபிஎல்!

கடந்த ஆண்டு ஐபிஎல் திருவிழா கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் உற்சாகமாக நடைபெற்று முடிந்தது. இந்தியாவில் கொரோனா தீவிரமாக இருந்ததால் ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெற்றன. மேலும் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் இன்றி காலி மைதானத்தில் நடைபெற்றன. இதனால் ஐபிஎல் போட்டிகளை பார்க்க தொலைக்காட்சி மற்றும் செயலிலை ரசிகர்கள் பெரிதும் நாடினர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பியது. இதனால் அந்த சேனலுக்கு கொள்ளை லாபம் என்றே கூறலாம்.

அதேபோல் தற்போது ஹாட்ஸ்டார் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது ஹாட்ஸ்டார் வழியாக மட்டும் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வருமானத்தை ஸ்டார் நிறுவனம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஐபிஎல் போட்டியின் போது ஒவ்வொரு ஓவர், விக்கெட், ட்ரிங்ஸ் பிரேக்களுக்கு மத்தியில் விளம்பரம் ஒளிபரப்பு செய்ததன் மூலம் இத்தொகை கிடைத்துள்ளளது. 10 நொடி விளம்பரத்திற்கு மட்டும் 12.5 லட்சம் ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் பார்வையாளர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த தொகை மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
newstm.in

